நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள், வட்டாட்சியர் சாந்தி, வருவாய்த் துறை அலுவலர்கள், ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எண்ணெய் எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் ஓஎன்ஜிசி நிறுவன அலுவலர்கள்தெரிவித்தனர்.
அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட வட்டாட்சியர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.