தமிழ்நாடு

tamil nadu

சட்டத்தை மீறும் ஓஎன்ஜிசி நிறுவனம் - கோட்டாட்சியரிடம் மனு

By

Published : Jul 24, 2020, 5:59 PM IST

நாகை: சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

சட்டத்தை மீறுவதாக ஒஎன்ஜிசி நிறுவனம் மீது பேராசிரியர் புகார்
சட்டத்தை மீறுவதாக ஒஎன்ஜிசி நிறுவனம் மீது பேராசிரியர் புகார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குத்தாலம் தோப்புத் தெருவில் புதிய எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் பேசுகையில், " கரோனா பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் தங்கள் பணியை செய்து வருகின்றன. குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் பழைய எண்ணெய் கிணறு உள்ள பகுதியில் புதிய எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கியுள்ளது.

சட்டத்தை மீறுவதாக ஒஎன்ஜிசி நிறுவனம் மீது பேராசிரியர் புகார்

இந்த கிணற்றை அமைப்பதற்கு 2013இல் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு காவிரிப்படுகைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது.

தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் குத்தாலத்தில் ஷேல்மீத்தேன் கிணறு அமைத்து வருகிறது. 2018க்கு பிறகு அமைக்கப்படும் கிணறுகள் எல்லாம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான் என்று இந்திய பெட்ரோலியத் துறை கூறியுள்ளது.

அதன்படி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு அரசின் சட்டத்தை மதிக்காமல் அபாயகரமான கிணற்றை அமைத்து வருகிறது. 2014இல் ஆந்திரா கிழக்கு கோதாவரியில் கெயில் குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் எந்தவித அனுமதியும் பெறாமல் கெயில் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. 2020 வேளாண்மை சட்டத்தின்படி விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக குத்தாலத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய எண்ணெய் எரிவாயுக் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதிமன்ற ஊழியர்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details