தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் கைது - woman harassment

மயிலாடுதுறை: 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மாதவன்
மாதவன்

By

Published : Oct 17, 2020, 10:43 PM IST

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு அருகே பெயிண்டிங் வேலை பார்த்துவரும் இளைஞர், 8ஆம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவர் மளிகைக்கடைக்கு வரும்போது தலைமுடியை பிடித்து இழுத்து, தோளில் கிள்ளியுள்ளார். இதைக் கண்ட மளிகைக்கடைக்காரர் அவரைக் கண்டித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதே நாள் மாலை அந்த சிறுமி வசிக்கும் தெருவிற்கு சென்ற இளைஞர், வாசல் கூட்டிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்து கண்ஜாடை காட்டி அழைத்திருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பெற்றோரும் அந்த இளைஞரைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அச்சத்தில் அலறியுள்ளார். இதையடுத்து, அவர் சிறுமியின் வீட்டின் கொல்லைபுற வழியாகத் தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் பெயிண்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதான இளைஞருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details