தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவிடைக்கழி முருகன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு - Theft in Thiruvidaikali Murugan temple

திருவிடைக்கழி கிராமத்திலுள்ள முருகன் கோயிலில் 1 லட்சம் ரூபாய் பணம் திருடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

உடைத்து திருட்டு
உடைத்து திருட்டு

By

Published : Dec 7, 2021, 10:09 AM IST

மயிலாடுதுறை: திருவிடைக்கழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருப்பணிகள் முடிந்த நிலையில், குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 6) அதிகாலை திருப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சாரத்தின் வழியே கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடினர்.

அத்துடன் பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றனர். காலை கோயில் நடை திறந்த மெய்க்காப்பாளர் சோமு உண்டியல் உடைந்திருப்பதைக் கண்டு கோயில் செயல் அலுவலர் ரம்யாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பொறையாறு காவல் நிலையத்தில் ரம்யா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ராணுவ வீரரிடமே வழிப்பறி; பிடிபட்ட திருடர்கள்

ABOUT THE AUTHOR

...view details