மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குத்தாலத்தில் தனி வட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சென்ற முட்டைகளை ஏற்றிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவ்வாகனத்தில் முட்டை வியாபாரிகள் மதன்பாபு, நரசிம்மன் ஆகியோர் 1.41 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது.