தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவரிடமிருந்து ரூ. 1.40 லட்சம் கொள்ளை: ஆந்திர மாநிலத்தவர் கைது - mayiladuthurai crime news

வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்ற முதியவரிடம் இருந்து ரூ.1.40 லட்ச ரூபாயைத் திருடிய, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் முதியவரிடமிருந்து ரூ. 1.40 லட்சம் கொள்ளை
ஒருவர் கைது

By

Published : Jan 5, 2022, 1:59 PM IST

மயிலாடுதுறை: மாருதி நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (75). இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கி ஒன்றில் ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தைத் தவறவிட்டதாகக் கூறி, அவரது கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து, கண்ணப்பன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த பணத்தை, ஒருவர் திருட முயன்றுள்ளார். அந்த நபரை பொதுமக்கள் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பதும், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவர் கண்ணப்பனை ஏமாற்றி பணம் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஜெகதீஷ் திருடிய பணத்தை மீட்ட காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவருக்குத் துணையாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த மூன்று நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் வேதா இல்லம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details