மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(47).
இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய நான்கு பேரும் காரில் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பியுள்ளனர்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காருகுடி கிராமத்தின் வழியே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிக்குமார் காரை ஒதுக்கியுள்ளார்.
அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த கீழ சாலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (64), காருகுடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகியோர் மீது மோதிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் கவிழ்ந்துள்ளது.