நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையிலிருந்து ஜான் என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணி, வினோத், செல்வேந்திரன், டான் பாஸ்கோ, போஸ் ஆகிய ஆறு பேர் கடந்த ஒன்றாம் தேதி காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துவிட்டு இன்று காலையில் கரை திரும்ப தொடங்கினர். இதையடுத்து மீன்பிடிக்க பயன்படுத்திய வலைகளை எடுத்தபோது, அதில் சிக்கியிருந்த 3 லிட்டர் கேனை எடுத்து பார்த்துள்ளனர்.
அந்தக் கேனில் சாராய வாடை வந்துள்ள நிலையில், அதனை மீனவர்களான அந்தோணி, வினோத், போஸ் ஆகிய மூவரும் குடித்துவிட்டு தூங்கினர்.