தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை - சீர்காழி நகை கொள்ளை வழக்கு

மயிலாடுதுறை: சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் நகைகளுடன் தப்பியோடிய வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீர்காழி
சீர்காழி

By

Published : Jan 27, 2021, 12:59 PM IST

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் இருவரை கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், வியாபாரியின் குடும்பத்தை கொடூரமாக தாக்கினர். இதில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜ், அவரது மருமகள் நிகில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்த நபர்கள் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவின் ஹார்டுடிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு, நகை வியாபாரி தன்ராஜ் காரிலேயே தப்பியோடினர்.

சீர்காழி நகை கொள்ளை

குற்றவாளிகள் சீர்காழி அருகே எருக்கூரில் பதுங்கியிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது மனிபால் என்பவரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். ரமேஷ், மனீஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details