தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 ஆண்டுகள் பழமைமிக்க சித்தர்காடு கருவாட்டுச்சந்தை: 60 நாட்களுக்குப் பின் திறப்பு - சித்தர்காடு கருவாட்டு சந்தை

சுமார் 60 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட சித்தர்காடு கருவாட்டுச் சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கருவாடு வாங்கிச் சென்றனர்.

oldest karuvadu market opening after 60 days
சித்தர்காடு கருவாடு சந்தை

By

Published : Jul 11, 2021, 8:50 PM IST

மயிலாடுதுறை: கருவாட்டுச் சந்தையாகத் தமிழ்நாட்டில் முதலாவதாக தொடங்கப்பட்ட சந்தை, மயிலாடுதுறையில் உள்ள 'சித்தர்காடு' கருவாட்டுச் சந்தை ஆகும்.

இது நூற்றாண்டைக் கடந்து இன்னமும் மாறாத மணத்தோடு, கருவாட்டுப் பிரியர்களை தன்வசம் வைத்துள்ளது.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் இந்த கருவாட்டுச் சந்தையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மீனவர்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட கருவாடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வர்.

கருவாட்டுப் பிரியர்களின் வரப்பிரசாதமாகச் செயல்பட்ட இந்தச் சந்தை, கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

விற்பனையை எதிர்நோக்கி கருவாடுகள்

மீண்டும் திறப்பு

தற்போது தமிழ்நாடு அரசு ஊரடங்குத் தளர்வினை அறிவித்துள்ளதால், இன்று (ஜூலை 11) அதிகாலை சித்தர்காடு கருவாட்டுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

ஏறத்தாழ 60 நாள்களாக சந்தைத் திறப்பை எதிர்பார்த்திருந்த மக்கள், இன்று காலை முதலே சந்தைக்குப் படையெடுத்தனர்.

மீண்டும் சந்தை திறந்த பூரிப்புடன் கருவாடு விற்கும் பெண்

சந்தைக்கு வந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சந்தையில் கொடுவா, சுறா, திருக்கை, இறால் உள்ளிட்ட 40 வகையான கருவாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திறக்கப்பட்டாலும், இங்கு குறைந்த விலைக்குதான் கருவாடுகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திறந்த சித்தர்காடு கருவாட்டுச் சந்தை

இதையும் படிங்க: 17 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நெல்லையப்பர் கோயில் வாசல்கள் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details