மயிலாடுதுறை: காந்தி நகரைச் சேர்ந்த வயதான மூதாட்டி நிர்மலா( 70). இவர் இன்று (ஜூலை 11) மதியம் தனது வீட்டுக் கொல்லைப்புறத்தை சுத்தம் செய்துள்ளார். அப்போது உபயோகத்தில் இல்லாத செப்டிக் டேங்கின் மீது ஏறி சுத்தம் செய்த போது செப்டிக் டேங்க் மூடி உடைந்து செப்டிக் டேங்க் குழியில் தவறிவிழுந்தார்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று செப்டிக் டேங்க் படுகுழியில் இருந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த மூதாட்டி நிர்மலாவை கயிறு கட்டி மீட்டு தரைக்கு கொண்டு வந்தனர்.