தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேரோடு சாய்ந்த 20 ஆண்டு பழமையான வேப்பமரம் - Nagai district News

நாகை: மயிலாடுதுறையில் பிரதான சாலையில் 20 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

Old neem Tree broken in to the Road
Old neem Tree broken in to the Road

By

Published : Aug 2, 2020, 1:02 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரதான சாலையான காமராஜர் சாலையில் கண்கொடுத்த பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயில் அருகில் 20 ஆண்டுகள் பழமையானவேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த மரம் திடீரென சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது. அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கடந்த ஒருவாராமாக பெய்த மழையின் காரணமாக இம்மரம் சாய்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மரம் மின்கம்பியில் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும்,சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்தில் மரம் அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து, மின்சார ஊழியர்கள் மின் இணைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details