நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் நூறு நாள் வேலைதிட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால்களை ஆழப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பெரிய பானைகள் இருப்பது தெரியவர அவர்கள் உடனடியாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வேதாரண்யம் அருகே பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு! - Old Archaelogical stone at Vedaranyam
நாகை: வேதாரண்யம் அருகே பல ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்த்த முன்னோர்கள் புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழி என்பது தெரியவந்தது. மேலும் அந்தத் தாழியில் பற்கள் உள்ளிட்ட மனித உடலின் பல்வேறு பாகங்களின் எலும்புகள், முன்னோர்கள் பயன்படுத்திய வாள் போன்ற கூர்மையான ஆயுதம், களிமண்ணால் செய்யப்பட்ட ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இதையடுத்து, தாழிக்குள் இருந்து எடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள், பொருள்களை வருவாய்த் துறையினர் ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து வெளியில் தெரியும் செங்கல் கட்டுமானம்