மயிலாடுதுறை: குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் எரிவாயு சேமிப்பு நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள விளாவடி காலனியில் புகழேந்தி அவரது மனைவி ஜானகி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வீட்டின் கொல்லை புறத்தில் 60 அடியில் போர்வெல் அமைத்து அதன் மூலம் குடிதண்ணீர் பயன்படுத்தி வந்துள்ளார்.
சமீபகாலமாக இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்து ஐந்து மணி நேரத்தில் காவி நிறத்தில் மாறிவிடுகிறது. மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஒவ்வாமை, தலைமுடி உதிருதல், மேல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பேரூராட்சியால் வழங்கப்படும் குடிதண்ணீரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தாங்கள் முன்னதாக பயன்படுத்திய போர்வெல் தண்ணீர் காவி நிறமாக மாறி தண்ணீரின் மேலே ஆயில் மிதப்பதாகவும், அருகாமையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கலந்து வருவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார். தங்கள் பகுதியில் போர்வெல் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினர் நிலத்தடி நீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் அமைத்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து போர்வெல் வாட்டர் பயன்படுத்த முடியாத நிலைக்கு காவி நிறத்தில் உள்ளதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர்வெல் தண்ணீரில் ஆயில்...ஓஎன்ஜிசி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு... இதையும் படிங்க:14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு