மயிலாடுதுறை: காழியப்பநல்லூர் என்.என். சாவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்பரத் என்பவர் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாவிடம் அளித்த மனுவில் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத போது தனிஅதிகாரிகள் கண்காணிப்பில் ஊராட்சி நிர்வாகம் நடபெற்றது.
2018-2019ஆம் நிதியாண்டில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல ஊராட்சிகளில் 100 சதவிகித முழுமானியத்தில் (இலவசமாக) கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகைகள் அமைத்துகொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. சந்திரபாடி, காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி, மாமாகுடி, திருச்சம்பள்ளி, விசலூர் ஆகிய ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்டத்தில் விண்ணப்பித்து பெற்ற விபரத்தின்படி மேற்கண்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் பார்க்க சென்றபோது பல ஊராட்சிகளில் ஆடு, மாடு கொட்டகையே அமைக்கப்படவில்லை.