தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் - அரசு செவிலியர் பயிற்சி பள்ளி

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 50 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

By

Published : Oct 13, 2022, 10:20 PM IST

நாகப்பட்டினம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.

உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது.

செவிலியர் பயிற்சி பள்ளியில் பூரான் கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

இதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததால் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details