மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்தவர் உஷா. இவர் இன்று (மே.12) குளத்திங்கநல்லூருக்கு மாதாந்திர தடுப்பூசி செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவருக்குப் பின்னே வந்த டிராக்டர் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உஷாவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.