நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் கவிதா அறிவழகனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கனைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது சீமான் கூறியதாவது, "தமிழ்நாட்டை ஆண்டு நாசம் செய்தது திமுகதான். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நாம் தமிழர் கட்சி சொல்லி வந்த நிலையில், தற்போது ஸ்டாலின் அதை காப்பியடித்து சொல்லி வருகிறார். சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது மனித கழிவுகளை யார் அள்ளினார்கள்? பட்டு பூச்சி வளர்ப்பு , ஆடு , மாடு வளர்ப்பு என நான் அறிவித்ததை காப்பி அடித்து தற்போது ஸ்டாலின் மக்களிடையே அறிவித்து வருகிறார்" என்றார்.