நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.