சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தேசிய மீன்வள கொள்கை, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் 2020 ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும், புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், இட ஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - புதிய சட்டத் திருத்தங்கள்
நாகப்பட்டினம்: மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
NTK Protest Against central government
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது, மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.