ஃபானி புயல் எச்சரிக்கையையடுத்து, நாகை துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிகளையும், மீனவர்களையும் எச்சரிக்கும் விதமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்தும் நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - எச்சரிக்கை
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைளிலும் ஈடுபடாததால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்களை கரை திரும்பக் கூறி படகின் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் வாக்கி டாக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.