நாகப்பட்டினம் மாவட்டம் மகாலட்சுமி நகர் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று (அக். 16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 333 பயனாளிகளுக்கு தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படாது' - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நாகப்பட்டினம்: சுடுகாடு, நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படாது -அமைச்சர் ஓ.எஸ். மணியன்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், “சுடுகாடு, நீர்நிலை, அரசு புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. சுனாமி குடியிருப்புகளுக்கு மீதம் வழங்கப்படவேண்டிய இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை