வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை, நாளை மறுநாள் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - nagapattinam latest news
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இந்நிலையில், காரைக்கால் தனியார் துறைமுகம், நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை சின்னமான ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு