மயிலாடுதுறை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நள்ளிரவு (நவம்பர் 26) காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை அருகே பேச்சாவடி சாலையில், 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகப்பெரிய புளியமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
நிவர் புயல்: வேரோடு சாய்ந்த பழமைவாய்ந்த புளியமரம் - நிவர் புயல் அப்டேட்
மயிலாடுதுறை: நிவர் புயல் காரணமாக மயிலாடுதுறை அருகே பேச்சாவடி பிரதான சாலையிலிருந்த 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.
tree
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர், காவல் துறையினர், அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சாலையில் இதுபோன்று சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.