தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை... ஹார்ட் டிஸ்க், டைரி, செல்போன் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்! - தேசிய புலனாய்வு முகமை

மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் நிசார் அகமது (44)  என்பவரது வீட்டில்  என்.ஐ.ஏ சோதனையில்  இரண்டு பென் ட்ரைவ், 1 ஹார்ட் டிஸ்க், டைரி, செல்போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சென்னைக்கு கொண்டு சென்றனர்.

nia-raid-in-mayiladuthurai
மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை

By

Published : Jul 23, 2023, 6:45 PM IST

மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், 5 பேர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவர் வீடுகளில் என்ஐஏ சோதனை

சுமார் 24 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில், மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த தேரழுந்தூர் தெற்கு பட்டக்கால் பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது (44) வீட்டில் சென்னையில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

என்.ஐ.ஏ துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர சோதனைக்குப் பிறகு நிசார் அகமது பயன்படுத்திய 2 பென் ட்ரைவ், 1 ஹார்ட் டிஸ்க், டைரி, செல்போன் உள்ளிட்டவை கைப்பற்றி சென்னைக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல் தஞ்சையில் நடராஜபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகி ரஷித் முகமது வீட்டிலும் சோதனை தொடர்கிறது. திருச்சி மண்டல பிஎஃப்ஐ நிர்வாகியாக இருந்தவர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க :திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை!

ABOUT THE AUTHOR

...view details