தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு கூட்டம்: நான்கு மாதங்கள் நிதி ஒதுக்கவில்லை என ஊராட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு மாதங்களாக நிதி ஒதுக்காததால் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என குற்றஞ்சாட்டினர்.

நாகப்பட்டினம்: சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு மாதங்களாக நிதி ஒதுக்காததால் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டினர்.
நாகப்பட்டினம்: சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு மாதங்களாக நிதி ஒதுக்காததால் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டினர்.

By

Published : Mar 25, 2020, 7:53 AM IST

நாகப்பட்டினம் சீர்காழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 37 ஊராட்சிமன்ற தலைவர்கள் நான்கு மாதங்களாக நிதி ஒதுக்காததால் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை என குற்றஞ்சாட்டினர்.

கரோனா விழிப்புணர்வு கூட்டம் நான்கு மாதங்கள் நிதி ஒதுக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றச்சாட்டு

மேலும் மாஸ்க், சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் வழங்க முடியவில்லை என்றும், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றஞ்சாட்டினர்.

144 தடை உத்தரவால் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைக்கு செல்லும் மக்களுக்கான முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என கூறி அவர்கள் அரசு உடனடியாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்கி கிராமப்புற மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிக்க:கன்னியாகுமரியில் இருவருக்கு கரோனா அறிகுறி

ABOUT THE AUTHOR

...view details