நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி நகராட்சிக்குட்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். எந்த ஒரு முன் அறிவிப்பின்றி சீர்காழி வந்த மாவட்ட ஆட்சியர், ஆரம்ப சுகாதார நிலையம், கட்டண கழிவறை, கழிவுநீர் வாய்க்கால், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் சுகாதார பணிகளை செய்யாத நகராட்சி ஊழியர்களை எச்சரித்த அவர், சீரமைப்பு பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.