மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.
இதன் காரணமாக கூட்டம் அதிகமாகக் கூடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ள நிலையில், ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்கு பூம்புகார் கடற்கரை காவேரி ஆறு சங்கமிக்கும் இடத்தில் புதுமண தம்பதியினர் கூடியுள்ளனர்.
பூம்புகார் கடற்கரையில் ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கை கொண்டாடும் விதமாக, பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்திற்குவந்த தம்பதிகள் கடவுளை வணங்கி சம்பிரதாய நிகழ்வுகளை செய்தனர்.
பூம்புகார் கடற்கரையில் காவிரி ஆறு சங்கமிக்கும் இடத்தில் ஆடிப்பெருக்கை கொண்டாடிய புதுமணத் தம்பதிகள் பூம்புகார் காவேரி சங்கமிக்கும் இடத்திற்குவந்த தம்பதிகள் தாலியை மாற்றிக்கொண்டு திருமண மாலைகள், பூ, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து பூஜித்து ஆற்றில்விட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
மேலும், குறைந்த அளவே மக்கள் வந்து ஆடிப் பெருக்கை கொண்டாடி வருவதால் கடற்கரையில் கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க:'மூட நம்பிக்கை: கிரேனிலிருந்து விழுந்த பக்தர்'