தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதி! - Nagapattinam tamil news

நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியை புதுமணத் தம்பதி வழங்கினர்.

கரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமண தம்பதி
கரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமண தம்பதி

By

Published : May 17, 2021, 8:39 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பலரும் முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மணக்கோலத்தில் வந்து, கரோனா நிவாரண நிதி வழங்கினர்.

தாமரைக்குளம் கீழ்க்கரை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகன் ஷரின்ராஜ், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த விக்டர் ராஜ் என்பவருடைய மகள் சூர்யா ஆகியோருக்கு இன்று (மே.17) திருமணம் நடைபெற்றது.

கரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதி

ஊசி மாதா ஆலயத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்ட புதுமணத் தம்பதி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரை சந்தித்து முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 ஆயிரம் பணத்தை நிதியுதவியாக வழங்கினர்.

இதையும் படிங்க: திமுக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்:அதிமுக முன்னாள் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details