நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் 3ஆம் சேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் - சங்கீதா. இவர்கள் இருவருக்கும் இன்று(அக்.19) உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
ஸ்டாலினை ஆட்சியில் அமர வைப்பதே லட்சியம்: சபதமேற்று திமுகவில் இணைந்த புதுமணத் தம்பதி! - எல்.எஸ்.இ பழனியப்பன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆட்சியில் அமர வைப்பதே தங்களது லட்சியம் எனக் கூறி சபதமேற்று, மணக்கோலத்திலேயே புதுமணத் தம்பதியினர் திமுகவில் இணைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், நாகை தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எல்.எஸ்.இ பழனியப்பன் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே தங்களது இல்லற வாழ்க்கையின் தொடக்க நாளான இன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைய பாடுபடுவதே தங்களது முதல் லட்சியம் என்று சபதமேற்று திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து, மணமக்கள் இருவருக்கும் உடனடியாக திமுகவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் திருமணத்திற்கு வந்த அனைவரிடமும் திமுக.ஆட்சியின் சாதனைகளைக் கூறும் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன.