உலகை அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்கக் கூடும் இடங்களான மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஆகிய இடங்களில் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி பராமரித்து, முகக் கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பொருள்கள் பெற்றுச்செல்ல வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அருகே புதிய தற்காலிகமாக காய்கறி சந்தை தொடக்கம் - வேளாங்கண்ணி அருகே புதிய தற்காலிகமாக காய்கறி சந்தை தொடக்கம்
நாகை: வேளாங்கண்ணி அருகே தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள புதிய காய்கறி சந்தையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கரோனா நோய் பாதிப்பு, தற்காப்பு குறித்து எடுத்துக் கூறினார்

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புகழ்பெற்ற பரவை காய்கறி சந்தை போதிய இடவசதி இல்லாமல் பொதுமக்கள் இடைவெளியின்றி சிரமத்துடன் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பரவை சோதனைச்சாவடி அருகே புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு தற்காலிக சந்தையை அமைக்க அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய இடத்தில் காய்கறி சந்தை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தற்காலிக சந்தையை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் கரோனா நோய் பாதிப்பு, தற்காப்பு குறித்து எடுத்துக் கூறினார்