நாட்டில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க மாநில அரசுகளின் பங்களிப்புடன் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
இதில், நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க 21.66 ஏக்கர் நிலம் ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்தும், மிகவும் பின்தங்கிய, மருத்துவ வசதிகள் தேவைப்படும் பகுதியான மயிலாடுதுறை வருவாய் மண்டலத்தில் உள்ள நிடூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரியை அமைக்க உத்தரவிடக் கோரியும், திமுகவைச் சேர்ந்த குத்தாலம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.