நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக மின் அழுத்த குறைபாடு நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் குத்தாலத்தில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 43 லட்சம் மதீப்பீட்டில் 33/11 கிலோ வோல்ட் மின் திறனில் புதிதாக துணை மின் நிலையம் இன்று இயக்கி வைக்கப்பட்டது.