நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கை, கடந்த ஒரு மாதமாக மயிலாடுதுறை கோட்டத்தில் வலுத்துள்ளது. இதனை வலியுறுத்தி பல கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின விழா கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைப் பிரித்து இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, மயிலாடுதுறையில் மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது.