மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர் சங்கமித்தரன் தலைமையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தனி மாவட்ட கோரிக்கை; வழக்கறிஞர்கள் மனு! - pettision
நாகை: மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரி சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில மனு அளிக்கப்பட்டது.
MLA
பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர்கள், மயிலாடுதுறை கோட்ட மக்கள் தற்போது மாவட்ட தலைநகரை அடைய வேண்டுமானால் மற்றோரு மாவட்டத்தை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மயிலாடுதுறை கோட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.