கரோனா நோய்க் கிருமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவும், 21 நாள் ஊரடங்கு உத்தரவும் அமலிலுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா குறித்த விழிப்புணர்வு, மாவட்ட நிர்வாகம் மூலம் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மயிலாடுதுறை அருகேயுள்ள அரசூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருள்செல்வனுடன், தன்னார்வலர்கள் சேர்ந்து வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.