தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா: தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்!

மயிலாடுதுறை: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று வாகனத்தில் தீப்பிடித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

national
national

By

Published : Feb 4, 2021, 5:47 PM IST

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சாலையில் செல்கின்ற அல்லது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து உடனடியாக புகார் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தீ' செயலியை மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

ABOUT THE AUTHOR

...view details