மயிலாடுதுறை: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அகரகீரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 300 விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து, யூரியா தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் செயல்முறை விளக்க பணியையும் தொடங்கி வைத்தார்.