நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சாலை மறியல், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சீர்காழி காவல் நிலையத்தில் இவரது பெயர் ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் தனது குடும்பத்துடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரவுடிகளின் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்கும்படி மனு அளித்தார்.