உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் வரும் 24ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.
இதற்காக 20 கிலோ விலையில்லா சந்தனக் கட்டையை அரசு வழங்கியுள்ளது. இந்த சந்தனக் கட்டைகளை அரைக்கும் பணிகள் இன்று (ஜன.17) தொடங்கியுள்ளன. இப்பணியில் ஊழியர்கள் 40 நாட்கள் விரதமிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.