கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று (மே 10) முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக களையிழந்த நாகூர் தர்கா - வேளாங்கண்ணி! - நாகூர் தர்கா
நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.
![ஊரடங்கு காரணமாக களையிழந்த நாகூர் தர்கா - வேளாங்கண்ணி! nagore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11713106-1004-11713106-1620666128627.jpg)
nagore
களையிழந்த நாகூர் தர்கா - வேளாங்கண்ணி
இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. மேலும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. அத்தியாவசிய தேவைகளை தவிர அநாவசியமாக ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.