கரோனா வைரஸின் வீரியத்தைக் கண்டு உலக நாடுகளே அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இளைஞர்கள், கரோனா நம்மை என்ன செய்துவிடப்போகிறது என்ற எண்ணத்தில் நாகையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் கடிவாளம் போடும் விதமாக, நாளை முதல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், நாகையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் நபர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கரோனா வைரஸின் வீரியம் தெரியாமல் வீணாக சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்கள் வெளியில் அநாவசியமாக வருவது தடுக்கப்படும்.