தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி கிளினிக் அமைக்கக் கோரி கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: அம்மா மினி கிளினிக் அமைக்கக் கோரி கொட்டும் மழையில் குடை பிடித்து பெண்கள் உள்பட 300 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்
கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்

By

Published : Dec 17, 2020, 6:34 PM IST

கிராமப்பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதியை பெறுவதற்கு அம்மா மினி கிளினிக் என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2000 மருத்துவ கிளினிக் அமையவுள்ளன. இத்திட்டத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழ்நாடு எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடக்கி வைத்தார்.

கொட்டும் மழையில் போராட்டம்

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலைய வளாகத்தில் அரசு அறிவித்த அம்மா மினி கிளினிக்கை அமைக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்

துளசியாபட்டின துணை சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி பெண்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details