தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தற்கொலை முயற்சி - தாய் உயிருடன் மீட்பு - 2 குழந்தைகள் உயிரிழப்பு - நாகை பெண் தற்கொலை முயற்சியில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாகை: கிணற்றில் இரண்டு குழந்தைகளை வீசி தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெண்ணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிணற்றில் தற்கொலை முயற்சி
கிணற்றில் தற்கொலை முயற்சி

By

Published : Jul 16, 2020, 4:54 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரோஷ் யோகாம்பிகை தம்பதி. இவர்களுக்கு தரணீஸ்வரன்(3), கதிர்பாலன்(1) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், இன்று(ஜூலை 16) காலை சுரேஷ் தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தாயுடன் வீடு திரும்பினார். பின்னர் மனைவி, குழந்தைகளை தேடினார்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில், இரு குழந்தைகளும் மனைவியும் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் மூவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர். யோகாம்பிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் யோகாம்பிகை பலமுறை அரசு தேர்வு எழுதியும் வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.

இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details