தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் செய்து ஏமாற்றிய கணவர்-மாற்றுத்திறனாளி பெண் தர்ணா - நாகை மாவட்ட செய்திகள்

நாகையில் திருமணம் செய்து தலைமறைவாகி ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி பெண் தர்ணா
மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

By

Published : Mar 12, 2022, 8:13 PM IST

நாகப்பட்டினம்: ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்தவர் விமலாதேவி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது பெற்றோருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கையில் பதாகையுடன் இன்று (மார்ச் 12) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் ஆய்வாளர் சிவராமணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது விமலாதேவியின் தாயார் கூறுகையில், "கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் எனது மகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் திருமணம் செய்து நடந்தது. 15 நாள்கள் எனது மகளுடன் சங்கர் வசித்தார். அதன் பின்னர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்.

திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் - மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

மூன்றாண்டுகள், கடந்த நிலையில் இன்று வரை எனது மகளுடன் சங்கர் ஃபோனில் கூட பேசியது இல்லை. நாங்கள் தொடர்பு கொண்டால் கூட சங்கர் பேச மறுக்கிறார். மூன்று ஆண்டுகளில் ஒருமுறை கூட நாகப்பட்டினம் வரவில்லை.

எனது மகளை திருமணம் செய்து ஏமாற்றிய சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை. அதனால், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, நாகூர் ஆய்வாளர் சிவராமணி, மீண்டும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளியுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என சமாதானம் கூறி அனுப்பிவைத்தார்.

இதையும் படிங்க: ஒன்றியக்குழு கூட்டத்தில் அலுவலர் மீது பெண் கவுன்சிலர் சரமாரி புகார்

ABOUT THE AUTHOR

...view details