யேசுக் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இந்த தவக்காலத்தை கடைப்பிடிக்கும் கிறிஸ்துவர்கள் அசைவ உணவகளை தவிர்த்து விடுவார்கள்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் தொழுகை! - ash wednesday celebration
நாகப்பட்டினம்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. அதற்கான சிறப்புத் தொழுகையும் தேவாலயத்தில் நடைபெற்றது.
ash wednesday
தவக்காலத்தின் முதல் நாளான இன்று, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பிரபாகர், சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடக்கிவைத்தார். இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
இதையும் படிங்க:’டெல்லி சகோதரர்கள் அமைதி காக்க வேண்டும்; விரைவில் அமைதி திரும்பும்’ - பிரதமர் மோடி