தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்துப் பணி: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு - B. Chandra Mohan IAS.,

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நடைபெற்றுவரும் குடிமராமத்துத் திட்டப் பணிகளைச் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

B. Chandra Mohan IAS.,
Citizenship Work in nagapattinam

By

Published : May 28, 2020, 3:37 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுப்பணித் துறை சார்பில் நடைபெற்றுவரும் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான குடிமராமத்துத் திட்டப் பணிகளைச் சிறப்பு கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முதன்மைச் செயலாருமான பி. சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்., இன்று (மே 28) நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

சேத்திராபாலபுரத்திலிருந்து மணக்குடி வரை 12 கி.மீ. காவிரி ஆறு தூர்வாரும் பணியைப் பார்வையிட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் 80 இடங்களில் தூர்வாரும் பணிகளும் 131 இடங்களில் குடிமராமத்துப் பணிகளும் என ரூ.51 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பி. சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்.,

மேட்டுரில் திறக்கப்படும் காவிரிநீர் கடைமடைப் பகுதிக்கு வந்து சேருவதற்கு முன் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்” என்று கூறினார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ஊதிய உயர்வு வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டி கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details