கரோனா பரவலை தடுப்பதற்காக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் சென்னையில் அதிகமாக காவலர்களுக்கு கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காவலர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது, அதில் புகார் அளிக்க வரும் மனுதாரர்கள் காவலர்கள் என அனைவரையும் கண்காணிப்பு அலுவலகத்தின் வாயிலில் சோதனை செய்வதுடன் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமிநாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.