நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலுக்கு அருகிலிருப்பதால் காலம் காலமாக மதுக் கடத்தல் தொடர் கதையாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 40 நாட்களுக்கு முன்பு ராஜசேகரன் காவல் துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற நாள்முதலே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார்.
வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க 24 மணிநேரமும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட ’விட்டர்’ ரோந்து காவலர்களை அறிமுகம் செய்துவைத்துள்ளார். மேலும், மது கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் இதுவரை 150 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக மாவட்டம் முழுவதும் அமைதி நிலவி வருகிறது’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கெத்துக்காட்டும் காவல்துறைக் கண்காணிப்பாளர்