நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு என்ற இடத்தில் சீர்காழி - நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான புளியமரம், பனைமரம், வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி கடத்துவதை தடுத்து நிறுத்திய விவசாயிகள் நான்கு வழிச்சாலைகாக சாலையோரத்தில் இருபுறமும் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதித்த பின்னர் சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்பட வேண்டும் என தடை விதித்துள்ளது.
அந்த தடையினை மீறி ஆளுங்கட்சியினர் திருட்டுத்தனமாக வெட்டுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கான ரூபாய் மரங்கள் அவசர அவசரமாக பொக்லைன் இயந்திரம் மற்றும் நூற்றுக்கணக்கான ஆட்களைக் கொண்டு வெட்டப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.